தலைமைச்செயலகம்... யாரை ஏமாற்ற?- மு.க.ஸ்டாலின்

M.K.Stalin
மு.க.ஸ்டாலின்
Published on

புதிய தலைமைச்செயலகம் கட்டுவது குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஜய் அரசை விமர்சித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மீனவர் குடியிருப்புகளை அழித்துவிட்டு புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களையே நடத்திவிட்டன. இந்த நிலையில் பாதிக்கப்படக்கூடிய மீனவர் மக்கள் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து புகார் அளித்தனர். அதையடுத்து, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:

”பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?

அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?

முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!

மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்!

ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம்.

மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்!” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.

அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக?

முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா?

logo
Andhimazhai
www.andhimazhai.com