அப்பாவைத் தேடாதீர்கள், மக்கள் மனதில் இருக்கிறேன் : மு.க. ஸ்டாலின் பதில்

M.K.Stalin reacts to CM Vijay's speech
முதல்வரின் கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
Published on: 

முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ஒரு குட்டிக் கதையைச் சொல்லி, அப்பா எங்கே என்று பேசியதற்கு இன்று திருவாரூரில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

அங்கு நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது :

" இன்றைய முதல்வருக்குச் சொல்கிறேன். கோட்டையில்தான் கோப்புகள் இருக்கின்றன. என்னைத் தேட வேண்டிய அவசியம் இல்லை.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் என்ற கையெழுத்து இருக்கும்.

’தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நான் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பரவாயில்லை; எனக்கு இதுவே போதும்’ என்று அறிஞர் அண்ணா கூறியது போல், மகளிர் உரிமைத்தொகை திட்டம் இரு்க்கும்வரை மக்கள் மனதில் நான் தான் முதல்வர்." என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com