சென்னைக்கு தி.மு.க. தனி வாக்குறுதிகள்... விஜய் தாக்கமா?

mkstalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தலைநகர் சென்னைக்கென தனி வாக்குறுதிகள் அடங்கியதேர்தல் அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

சென்னை சூப்பர் 6 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வாக்குறுதி அறிக்கையை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முற்பகல் 11 மணியளவில் மு.க.ஸ்டாலின் வெளியிட அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக்கொண்டார்.

இப்படியான தேர்தல் அறிக்கை கடைசி நேரத்தில் வெளியிடப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. 

நடிகர் விஜய்க்கு மாநிலம் முழுவதும் பரவலாக நகர்ப்புறங்களில் ஆதரவு நிலவுவதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

சென்னையிலும் பெரம்பூரில் போட்டியிடும் விஜய், சென்னைக்கென சில வாக்குறுதிகளை வழங்கியதும் முக்கியத்துவம் பெற்றது. 

இந்நிலையில் தி.மு.க.வின் சென்னை வாக்குறுதிகளும் வந்துள்ளன.  

அதில், சென்னைக்கான மேம்படுத்தப்பட்ட பொதுவசதிகள், சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து, திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள், மனிதாபிமானம்-அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சினைக்குத் தீர்வு, உலகளாவிய சிறப்பு மையம், உலகளாவிய திறமைத் தளம் (Global Talen Gateway) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சென்னை தி.மு.க. வாக்குறுதிகள்
சென்னை தி.மு.க. வாக்குறுதிகள்
logo
Andhimazhai
www.andhimazhai.com