இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

மோடியின் குடும்பம் இதுதான் - மு.க.ஸ்டாலின் ட்வீட்!

அமலாக்கத்துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ. ஆகியவைதான் மோடியின் குடும்பம் என்று கிண்டலும் குற்றச்சாட்டுமாக ட்வீட் வெளியிட்டிருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

பா.ஜ.க.வுடன் கைகோர்த்த கட்சிகள், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளின் நிலவரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு புலனாய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை இணைத்து ஸ்டாலின்தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து விவரம்:

"பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு!

பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!

மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!” என்று ஸ்டாலின் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com