தமிழகத்துக்குச் சிறுமை செய்த விஜய் அரசு - மு.க.ஸ்டாலின் சாடல்

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on: 

மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளர். 

”இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.

நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது.

இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!” என்றும் ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார்.