
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன் பேரன் இன்பநிதி பட்டமளிப்பு விழா உட்பட்ட நிகழ்வுகளுக்காக 2 வாரப் பயணமாக இன்று பிரிட்டனுக்குப் புறப்பட்டார்.
வழக்கமாக கோடை காலத்தில் சிகிச்சை உட்பட தனிப்பட்ட பயணமாக, பிரிட்டனுக்கு மு.க.ஸ்டாலின் செல்வது உண்டு. அதே சமயத்தில், சில பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் நடைபெறும்.
முதலமைச்சராக இருந்தபோது அவர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
அதேபோல, மீண்டும் இரண்டு வாரப் பயணமாக அவர் சென்னை விமானநிலையத்திலிருந்து இன்று காலையில் புறப்பட்டார்.
இதையொட்டி தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
கொடுக்கப்படும் புத்தகப் பரிசுகளை அப்படியே வாங்கி உதவியாளர்களிடம் தந்துவிடும் அளவுக்கு பார்வையாளர்கள் அவரிடம் முண்டியடித்துக்கொண்டு பரிசுகளை வழங்கியபடி இருந்தனர்.
ஒருவழியாக அதை முடித்துக்கொண்டு அவர் விமான நிலையத்துக்குள் சென்றார்.
இந்தப் பயணத்தையொட்டி, உடன்பிறப்புகளுக்குக் கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.