வாய்திறந்த மு.க.ஸ்டாலின் - ஆளுநருக்கு வேண்டுகோள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் புதிய ஆட்சி தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மௌனம் காத்துவந்த நிலையில், புதிய அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனே தொடங்க வேண்டும் என்று இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து ஆளுநர் ஆணையும் பிறப்பித்து விட்டார்.

இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!

இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும்.” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com