உதயசூரியன் சின்னத்தில் ம.ம.க. போட்டி- தி.மு.க. பேச்சில் முடிவு!

மனிதநேய மக்கள் கட்சிக் குழு
மனிதநேய மக்கள் கட்சிக் குழு
Published on

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க.வுடன் பேசுவதற்காக இன்று காலையில் ம.ம.க. குழுவினர் அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றனர். அங்கு டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. குழுவினருடன் அவர்கள் பேசினர். 

பின்னர், வெளியே வந்ததும் ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ஐந்து தொகுதிகளை ம.ம.க. கேட்டதாகவும் மு.க.ஸ்டாலினுடன் பேசி அடுத்த கட்டமாகக் கூறுவதாகவும் தி.மு.க. குழுவினர் கூறினர் என்றும் அவர் கூறினார். 

மேலும், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com