தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்

தி.மு.க. அணியில் தலா 1 தொகுதி கேட்கும் ம.ம.க., த.வா.க.!

தி.மு.க. கூட்டணியில் தங்கள் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன.

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தலைமையிலான அக்கட்சியின் குழுவினர், தி.மு.க. தலைமையகமான அறிவாலயத்தில் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தங்களுக்கு கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் ஒரு தொகுதியை ஒதுக்கவேண்டும் என தி.மு.க.விடம் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

இதைப்போலவே, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையிலான அக்கட்சிக் குழுவினரும் தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் பேச்சு நடத்தினர். அவர்களும் த.வா.கா.வுக்கு ஒரு தொகுதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com