சென்னையில் 10 நாள்களுக்கு பிறகு மிதமான மழை!

சென்னையில் 10 நாள்களுக்கு பிறகு மிதமான மழை!
Published on

சென்னையில் சுமார் 10 நாள்களுக்குப் பிறகு தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. அத்துடன் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னையில் சுமார் 10 நாள்களுக்குப் பிறகு தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராயநகர், எழும்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com