தமிழ்நாட்டில் பருவமழை இயல்பை விட 4 சதவீதம் அதிகம்!

தமிழ்நாட்டில் பருவமழை இயல்பை விட 4 சதவீதம் அதிகம்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது இந்த ஆண்டு இயல்பை விட 4 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த பருவமழையின் மூலமே தமிழ்நாடு அதிக அளவில் மழையை பெறும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கியது.

கடந்த 4,5ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. இதை தொடர்ந்து தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு அதி கனமழை பெய்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை 458.9 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. ஆனால் இயல்பாக 442.8 மி.மீ அளவிலான மழை மட்டுமே பெய்திருக்க வேண்டும். எனவே இது இயல்பை விட 4 சதவீதம் அதிகம் ஆகும் . மேலும் 17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவில் மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com