சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

திருமணமான மகன் சொத்தில் தாய்க்கு உரிமை இல்லை! - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரின் சொத்தில் தாய்க்குப் பங்கில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாகையைச் சேர்ந்த மோசஸ் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரின் தாய் பவுலின் இருதயமேரி தனது மகனின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நாகை மாவட்ட நீதிமன்றம் மகனின் சொத்தில் தாய்க்குப் பங்கு உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இறந்த மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என்றும் உயிரிழந்த மோசஸின் மனைவி, குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது எனவும் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com