திருப்பரங்குன்றம் தீர்ப்பு - மு.வீரபாண்டியன் அதிர்ச்சி

மு.வீரபாண்டியன்
மு.வீரபாண்டியன்
Published on: 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்திருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்வே கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலதுசாரி சங் பரிவார் அமைப்புகளின் தவறான கோருதலை ஏற்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. 

 இந்த ஆண்டு மட்டும், அதுவும் ஒரே ஒருநாள் மட்டும்  தீபம் ஏற்றலாம் என்பது, அங்கு சில நூற்றாண்டுகளாக நடைமுறை வழக்கமாகவும் பாராம்பரிய முறையாகவும், சமூக நல்லிணக்கத்துடன்   நடந்து வரும் தீபத் திருவிழா முறையை முறிப்பதும், புதிய முறையை அறிமுகப் படுத்துவதும்  சமூக நல்லிணக்கத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வியப்பளிக்கிறது.

சட்டத்தின் அடிப்படையிலும்,உரிய வரலாற்று ஆதாரங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதி மன்றம் , நம்பிக்கையின் அடிப்படையில் இத்தகைய ஓர் இடைக்கால தீர்ப்பு வழங்கியிருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை பண்பான மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும்.

ஆகஸ்ட் 15, 1947 அன்று வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் 

இருந்தனவோ, அதே தன்மையுடன் அவைகள்  தொடர வேண்டும் என்பதை உறுதி செய்யும் 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  சட்டத்திற்கு எதிரானதாகும்.

எனவே, உடனடியாக இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும் . தமிழ்நாடு அரசு, உச்ச 

நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யும் புதிய மனுத்தாக்கல் செய்து, இடைக்கால உத்தரவை செயலிழக்க செய்ய வேண்டியது உடனடி தேவையாகும் .

திருப்பரங்குன்றத்தில் வழிவழியாக பாதுகாத்து வரும்  மதநல்லிணக்கத்தை உறுதிசெய்திட, அனைத்து பிரிவு மக்களும் ஒன்றுபட்டு அமைதியைப் பாதுகாக்க,  தேவையான  நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.