
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் பேராசிரியர் மு.இராமசாமி எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
செண்பகம் இராமசுவாமியின் 28 ஆம் ஆண்டு நினைவு, காரல் மார்க்ஸின் 143 ஆம் ஆண்டு நினைவு, நிஜ நாடக இயக்கத்தின் 48 ஆம் ஆண்டு நிறைவு ஆகியவற்றை முன்னிட்டு நடந்த இந்த விழாவில் நாடகத்துறை பேராசிரியரும் நாடகச் செயல்பாட்டாளரும் திரைப்பட நடிகருமான மு. இ ராமசுவாமி எழுதிய
'மெய்ப்பாட்டியலின் மெய்ப்பொருள்' பாகம் - 1,
'நாடகத் தமிழின் வேரும் திராவிட விழுதுகளும்',
'மனசுக்கு மருந்தாகும் மாயத்திரை' ஆகிய
மூன்று நூல்கள் வெளியிடப் பட்டன.
இத்துடன் அவர் 49 நூல்கள் எழுதி இருக்கிறார்.
பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி, முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் சிவசு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைப்பேராசிரியர் தூ. சேதுபாண்டியன் நினைவேந்தல் உரையாற்றினார்.
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் 'மெய்ப்பாட்டியலின் மெய்ப்பொருள்' பாகம் - 1 நூலை வெளியிட்டு விமர்சன உரையாற்றினார்.
பாளையங்கோட்டை, சதக்கத்துல்லா கல்லூரி, முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அ.ச. இராமையா 'நாடகத் தமிழின் வேரும் திராவிட விழுதுகளும்' நூலை வெளியிட்டு உரையாற்றினார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக இ .எம். ஆர். சி முன்னாள் தயாரிப்பாளர் சு.ரவிக்குமார் என்கிற ஸ்ரீரசா 'மனசுக்கு மருந்தாகும் மாயத்திரை' நூலை வெளியிட்டு உரையாற்றினார். நிறைவாக நூலாசிரியர் பேராசிரியர் மு. இராமசாமி ஏற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்வுகளை அருணாச்சலம் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை மதுரை நிஜ நாடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.