தமிழ் நாடு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும் மறைந்த முரசொலி மாறனின் தம்பியுமான முரசொலி செல்வம் பெங்களூரில் இன்று காலமானார்.
கருணாநிதியின் மகள் செல்வியின் கணவரான இவர், மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
நேற்று இரவுவரை நல்லபடியாகப் பேசிக்கொண்டிருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்வத்தின் உடல் சாலைவழியாக சென்னைக்குக் கொண்டுவரப்படுகிறது.
தி.மு.க.வின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில் நீண்ட காலமாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றிவந்தார்.
அப்பத்திரிகையில் வெளியான செய்திக்காக, சட்டமன்றத்தில் கூண்டில் நிறுத்தப்படும் தண்டனைக்கும் ஆளாக்கப்பட்டார்.