தமிழ் நாடு

வங்கக் கடலில் ஆந்திரக் கடலோரத்தில் நிலைகொண்டுள்ள முரசு புயல், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் அந்த மாநிலத்தில் கரையைக் கடக்கவுள்ளது.
அப்போது, மணிக்கு 120 கி.மீ. வேகம்வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையின் வடக்குப் பகுதி, திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளும் இதனால் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதனால் பொது மக்கள் அந்த நேரத்தில் வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.