
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர்
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில்,
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் (மாநில பொதுச் செயலாளர்),
எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் (மாநில பொருளாளர்),
எம். அப்துல் ரஹ்மான் (மேனாள் எம்.பி.),
கே. நவாஸ்கனி எம்.பி. ஆகிய 5 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘’ சென்னையில் நேற்று நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் இவர்கள் நியமிக்கப்பட்டனர்.” என்று கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் இந்தக் கட்சியுடன் முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.