
அதிமுக பொதுக்குழுவில் நிர்வாகிகளுக்கு பரிமாற 8 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன், முட்டை மசாலா என அசைவ உணவோடு, சைவ உணவும் சுடசுட தயாராகி வருகிறது.
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு சைவ, அசைவ உணவு அளிக்கப்பட உள்ளது. அதற்கான உணவு பட்டியல் வெளியாகியுள்ளது. காலை உணவு 3,000 பேருக்கு, மதிய உணவு சைவத்தில் 2,000 பேருக்கும், அசைவத்தில் 8,000 பேருக்கும் உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.
சைவம்:
1) தம்ஃப்ரூட் அல்வா
2) புடலங்காய் கூட்டு
3) சைனீஸ் பொரியல்
4) மாவடு இஞ்சி, நிலக்கடலை மண்டி
5) பிளாக்காய், உருளை மசாலா
6) பருப்பு வடை
7) அப்பளம்
8) ஊறுகாய்
9) மோர் மிளகாய்
10) வெஜ் பிரியாணி -தயிர் பச்சடி
11) சாதம்
12) கத்தரிக்காய், முருங்கக்காய், பீன்ஸ் சாம்பார்
13) வத்தல் குழம்பு
14) தக்காளி ரசம்
15) தயிர்
16) பருப்பு பாயாசம்
17) வாட்டர் பாட்டில்
18) வாழைப்பழம்
அசைவம்:
1. பிரட் அல்வா
2. மட்டன் பிரியாணி
3. தாளிச்சா
4. ஆனியன் தயிர் பச்சடி
5. கத்திரிக்காய் கட்டா
6. மட்டன் குழம்பு
7. சிக்கன் 65
8. வஞ்சரை மீன் வருவல்
9. முட்டை மசாலா
10. வெள்ளை சாதம்
11. தக்காளி ரசம்
12. தயிர்
13. இஞ்சி புளி மண்டி
14. பருப்பு பாயாசம்
காலை உணவு
1) கேசரி
2) வடை
3) பொங்கல்
4) இட்லி
5) சாம்பார்
6) கார சட்னி
7) தேங்காய் சட்னி
8) வாட்டர் பாட்டில்
9) காபி/டீ
மேலும், கூட்டத்துக்கு நடுவே சிற்றுண்டியாக மிக்ஸர், சிப்ஸ், ஸ்வீட், பிஸ்கட், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவை பேக் செய்யப்பட்டு, நிர்வாகிகளின் இருக்கையிலேயே வைக்கப்பட்டுள்ளது.