ஸ்டாலின் அண்ணாச்சி... வாக்குறுதி என்னாச்சி?- அமித்ஷா கூட்டத்தில் நயினார்

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் பா.ஜ.க.வின் நெல்லை மண்டல வாக்குச்சாவடி முகவர் மாநாட்டுக் கூட்டம் இன்று மாலையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

“மீனவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று சொன்னீர்களே... அந்த வாக்குறுதி என்னாச்சு? பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்றீர்களே? மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் எனக் கூறினீர்களே? எரிவாயு விலையைக் குறைப்பதாகச் சொன்னீர்களே... அதெல்லாம் என்னாச்சி?” என வரிசையாக கடந்த தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு, ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி என்று நயம்போலப் பேசினார். 

அவரின் இந்தப் பேச்சை திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் ஆமோதித்து ரசித்தனர். 

முன்னதாக, முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com