தமிழ் நாடு

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதைக் கூறினார்.
அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றமே 900 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது; ஆனால் சட்டமன்றம் கட்டிமுடிக்க 1,200 கோடி ரூபாய் என்றால் இதில் ஊழலுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் நயினார் நாகேந்திரன் சந்தேகம் தெரிவித்தார்.