ஆய்வு என்ற பெயரில் த.வெ.க.வினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:
” “ஆய்வு” என்ற பெயரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதைக் குத்திக் காட்டி, மாணவர்கள் முன்னிலையிலேயே அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறை கூறி, “லாஸ்ட் பெஞ்ச்” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் செல்வி. கீர்த்தனாவின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களைத் திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, “அராஜகம்”. செல்லுமிடமெல்லாம் அதிகாரிகளைவிட, கேமராமேன்களைக் கையோடு அழைத்துச் செல்கிறார்கள் த.வெ.க. அமைச்சர்கள்” என்று நயினார் கூறியுள்ளார்.