விஜய்யைத் தொடர்ந்து விமர்சிப்பதாகிவிடும்- நயினார் நழுவல்

Nainar Nagendran
நயினார் நாகேந்திரன்
Published on: 

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சியில் மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மேடையில் இடம் வழங்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அமைச்சர் நிர்மல்குமாரும் கேள்வி எழுப்பியிருந்தார். நயினாருக்கு என்ன அடிப்படையில் இடம் அளிக்கப்பட்டது என்று அவர் கேட்டிருந்தார்.

சென்னையில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினாரிடம், இந்த விவகாரம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “ விஐபி என யாரை அழைக்கிறார்களோ அவர்கள் செல்லலாம். நான் எப்படி அந்த மேடையில் இருந்தேன் என்பது ஒன்றும் இந்த நாட்டிற்கு தேவையான பிரச்னை இல்லை. ஆனால், இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அதைச் சொன்னால் நான் ஏதோ முதலமைச்சர், அவரைச் சார்ந்தவர்களைத் தொடர்ந்து விமர்சிப்பதுபோல் ஆகிவிடும்." என்று பதில் அளித்துவிட்டு, வேறு கேள்விகளைக் கேட்குமாறு சொன்னார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com