சாத்தூரில் நயினார் நாகேந்திரன் போட்டி!

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on

2026 சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடவுள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இந்த முறை நெல்லை தொகுதி ஒதுக்கப்படவில்லை.

இந்தநிலையில், கடந்த 5 முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கன்னியாகுமரியில் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “என்.டி.ஏ கூட்டணியில் சில இடங்களில் அவர்களுக்கு (அதிமுக) அதிகமாகக் கொடுத்திருக்கிறோம், சில இடங்களில் நாங்கள் அதிகமாக வாங்கியிருக்கிறோம். இது வெறும் தொகுதிப் பரிமாற்றமே தவிர, இதில் எந்த அவதூறு பிரச்சாரமும் இல்லை. மக்கள் இதை நம்ப வேண்டாம்.

நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். விருதுநகர் மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறும்” என்று கூறினார்.

2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் நெல்லையில் நாயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். இதில் 2006, 2016 ஆகிய தேர்தல்களில் அவர் வெற்றி பெறவில்லை.

இந்தசூழலில் அவர் சாத்தூரில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com