பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தமிழகத்தில் தங்கு தடையின்றி கிடைக்கும் போதைப் பொருள்கள்! – பிரதமர் மோடி

தமிழகத்தில் போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் போதைப் பொருள் கிடங்காக மாறுவதாக குற்றம்சாட்டிய அ.தி.மு.க. இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, “ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில் தமிழகத்தில், போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி அனைத்து இடங்களிலும் கிடைத்து வருகிறது. இதுதான் எனது மனதை அரித்தெடுக்கும் கவலையாக இருந்து வருகிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் கட்சியைக் குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாளைய தலைமுறையும் இந்த போதைப் பொருட்களால் பாதிக்கப்படும். இது அபாயத்தின் அறிகுறி. நீங்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்தால், தமிழகத்தின் எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடியின் உத்தரவாதம்" என்று பிரதமர் மோடி பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com