நவாஸ் எம்.பி நிறுவனத்தில் இ.டி. சோதனை
நவாஸ் எம்.பி நிறுவனத்தில் இ.டி. சோதனை

நவாஸ்கனி எம்.பி.யின் கூரியர் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை!

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோதப் பணபரிமாற்றப் புகார் அடிப்படையில் சென்னையில் சில மாதங்களாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

அதன்படி, சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராயர் நகரில் இருக்கும் நெடுஞ்சாலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் முகப்பேர், கொளத்தூர், திருவான்மியூர், மதுரவாயல், பல்லாவரம் உட்பட்ட இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

வரும் மக்களவைத் தேர்தலிலும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதாக நவாஸ்கனி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்புடைய எஸ்.டி. கூரியர் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com