ஆகஸ்ட் முதல் சென்னை மெட்ரோவில் தேசிய அட்டைதான்!

சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ
Published on

சென்னை மெட்ரோ இரயில் சேவையில், அடுத்த மாதம் முதல் சிஎம்ஆர்எல் பயண அட்டை முறையிலிருந்து தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை முறைக்கு (என்சிஎம்சி - சிங்கார சென்னை அட்டை) மாற்றப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் தரப்பில் கூறப்படுவதாவது:

“சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க சிஎம்ஆர்எல் பயணஅட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (என்சிஎம்சி - சிங்காரச் சென்னை அட்டை) அறிமுகப்படுத்தியது.

01.08.2025 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (என்சிஎம்சி) முழுமையாக மாறத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் சிஎம்ஆர்எல் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. கியூஆர் பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.

பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில்பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும், பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்சமதிப்பை (ரூ.50/-க்கும் குறைவாக) அடையும் போது, சிஎம்ஆர்எல் பயண அட்டையை சென்னை மெட்ரோஇரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்குப் பதிலாக, பயணிகள் தேசியபொது போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை, மீதமுள்ள தொகை புதிய தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.” என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com