கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம்- டி.ஜி.பி.யிடம் அறிக்கை கேட்ட தேசிய மகளிர் ஆணையம்!

TVK MLA Arul Vignesh
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ்
Published on: 

கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், அம்மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு டி.ஜி.பி.யிடம் தேசிய மகளிர் ஆணையம் கோரியுள்ளது.

அண்மையில், அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு வாட்சாப் மூலமாக ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், அவ்வாறு தான் எந்த குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை என்று அருள் விக்னேஷ் கூறி வருகிறார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து, அது தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், எந்தவித அரசியல் அழுத்தங்களும் இல்லாமல், நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு, ஏழு நாள்களுக்குள் இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram