மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

தீபாவளியையொட்டி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை, நுங்கம்பாக்கத்தில் தன் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல்ரீதியாக அவர் பேசியதுடன், லியோ படத்தில் தனக்கு திரிஷாவை வன்புணர்ச்சி செய்யும் காட்சி தரவில்லை என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய இந்த அத்துமீறல் பேச்சுக்கு திரிஷா தன் டிவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்புவும் ஆதரவளித்திருந்தார். இந்நிலையில், இன்று காலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் தமிழக காவல்துறைத் தலைவருக்கு இந்த விவகாரம் குறித்து பரிந்துரை அனுப்பப்பட்டது.

ஆணையத்தின் டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தியில், “நடிகை திரிஷாவைப் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் குறிப்பிட்ட சிறுமைப்படுத்தும் வாசகம் குறித்து ஆணையம் மிகவும் கவலைகொள்கிறது. தேசிய மகளிர் ஆணையம் இதை சுயவழக்காக எடுத்துக்கொண்டிருக்கிறது. இத்துடன், இந்தியக் குற்றவியல் சட்டம் 509 பி பிரிவின்படி அவர் மீது வழக்குப்பதிய தமிழக காவல்துறை தலைவருக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம். இப்படியான வாசகங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை இயல்பாக ஆக்கிவிடுகின்றன. இது கடுமையான கண்டனத்துக்கு உரியது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com