மு.க.ஸ்டாலினுடன் நெடுமாறன் திடீர் சந்திப்பு!

MKStalin Nedumaran
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நெடுமாறன் சந்திப்பு
Published on: 

தமிழ்நாட்டின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா டிசம்பர் 29ஆம் நாள் சென்னையில் நடைபெறுகிறது. அவ்விழாவைத் தொடங்கிவைக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினைக் கேட்டுக்கொள்ள மாநாட்டுக் குழு தீர்மானித்தது.

விழாக் குழுவின் தலைவரும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ. நெடுமாறன், ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் முதலமைச்சரின் இல்லத்தில் அவரை இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

“மிகுந்த கனிவோடு வீட்டின் வாயிலிலேயே நெடுமாறன் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார்.” என்று பழ. நெடுமாறன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். 

டிசம்பர் 29ஆம் நாள் விழாவில் உறுதியாக பங்கேற்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த உரையாடலின்போது அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram