ஒடிசா, பூரி மக்களவைத் தொகுதி பிரச்சாரத்தில் அமித் ஷா
ஒடிசா, பூரி மக்களவைத் தொகுதி பிரச்சாரத்தில் அமித் ஷா

ஒடிசாவுக்கு தமிழ் முதல்வரா வேண்டும்?- பிரச்சாரத்தில் உசுப்பிவிட்ட அமித் ஷா!

ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள அடுத்த கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பூரி ஜெகநாதர் ஆலயத்தின் சாவிகள் தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் மோடி பேசி, சர்ச்சைக்கு ஆளான நிலையில், மைய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் பங்குக்கு தமிழர்- ஒடியாகாரர் பிரச்னையைக் கிளப்பிவிட்டார்.

பூரி தொகுதிக்கு உட்பட்ட சம்பல்பூர், பாராஜங், கியோஞ்சர், நயாகர் ஆகிய இடங்களில் நேற்று அமித்ஷா பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார்.

அப்போது, “ நவீன் பாபுவுக்கு வயதாகிவிட்டது. அவரால் வேலைபார்க்க முடியாது. அவருக்கு உடல்நிலை சரியில்லை. அரசாங்கத்தை அவர் நடத்தவில்லை. நவீன் பாபு அல்ல ஒரு தமிழ் பாபுதான் அரசாங்கத்தை நடத்துகிறார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மண்ணின் மைந்தனையே முதலமைச்சராக ஆக்குவோம். ” என்று அமித் ஷா பகிரங்கமாகவே கூறினார்.

அவருடைய இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் வலுவாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com