நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்!

நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு மார்ச் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே-5ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இன்று முதல் ஆன்லைன் வழியாக மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். nta.ac.exams, nta.ac.in.neet ஆகிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மார்ச் மாதம் 9-ந் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் எழுதி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com