அண்ணாமலை
அண்ணாமலை

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இன்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்றைய தினம், நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்கும் நீட் தேர்வு, தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது என்பது, ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது.

தமிழகத்தில், மருத்துவக் கல்வி இடங்களை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்தியுள்ள பிரதமர் மோடி வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கையும் நிச்சயம் நிறைவேற்றுவார்.

வருங்காலத்தில் நீட் தேர்வு மூலம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது உறுதி.” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com