தமிழ் நாடு
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தேர்வுக்கூடச் சீட்டு இன்று காலையில் வெளியிடப்பட்டுள்ளது.
அல்லோபதி, ஓனியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கான தகுதி- நுழைவுத் தேர்வு நீட் வரும் 5ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. அதற்கான தேர்வுக்கூடச் சீட்டை தேசியத் தேர்வு முகமையின் இணையதளத்தில் போட்டியாளர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதள முகவரியில் போய், நீட் தேர்வுக்கான பகுதியைச் சொடுக்கினால் தேர்வுக்கூடச் சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.