
ஜூலை 21 நடத்தப்பட்ட நீட் மறு தேர்வின் முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த ஆரியன் குப்தா, ஹரியானாவின் பான்சுல் பன்சல் ஆகிய இரு மாணவர்களும் 715 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர். 19 மாணவர்கள் 700 மதிப்பெண்களும் 138 பேர் 690க்கும் மேல் எடுத்துள்ளனர்.
1492 பேர் 650க்கும் மேல் பெற்றுள்ளனர். 600 அல்லது அதற்கும் அதிகமாகப் பெற்றவர்கள் 10,160 பேர் என நீட் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மாணவர்கள் 690க்கும் மேலாகப் பெற்றுள்ளனர். வேங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்தார்.
மொத்தம் தேர்வு எழுதிய சுமார் 20 லட்சம் மாணவர்களில் 11,21185 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு மிகவும் கடினமானதாகக் கருதப்பட்டது. அதில் 1236631 பேர் தகுதி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு அதைவிட ஒரு லட்சம் பேர் குறைவாகவே தகுதி பெற்றுள்ளனர். இதையடுத்து, கல்லூரிகளில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் சிறிதளவு குறையக்கூடும் என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.