ஜான்சி ராணி, நெல்லை அ.தி.மு.க. வேட்பாளர்
ஜான்சி ராணி, நெல்லை அ.தி.மு.க. வேட்பாளர்

அ.தி.மு.க.விலும் வேட்பாளர் மாற்றம்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் நெல்லை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துசோழன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். 

அவருக்குப் பதிலாக இதே மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பேரூராட்சித் தலைவர் ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், அ.தி.மு.க.வின் செயற்குழு உறுப்பினராகவும் நெல்லை புறநகர் மாவட்ட இணைச்செயலாளராகவும் இருந்துவருகிறார். 

முன்னதாக, பா.ஜ.க. கூட்டணியில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க.வின் வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக அன்புமணியின் மனைவி சௌமியா புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

நெல்லையில் சிம்லா முத்துசோழன் சென்னைக்காரர் என்பதும் அ.தி.மு.க.வில் அண்மையில்தான் சேர்ந்தவர்; அதுவும் 2016 ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் என்பதும் அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இன்று அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாற்றி ஜான்சி ராணியை வேட்பாளராக அறிவித்தார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com