விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகையுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகையுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

காங். நெல்லை எம்.பி. தொகுதி, விளவங்கோடு எம்.எல்.ஏ. தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் புதுவை உட்பட 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். நெல்லை, மயிலாடுதுறை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சிறிது நேரத்துக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில், நெல்லை வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி, நெல்லையில் வழக்குரைஞர் இராபர்ட் புரஸ் போட்டியிடுகிறார். 

இத்துடன், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளராக டாக்டர் தாரகை குத்பர்ட் நிறுத்தப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com