ஜே.இ.இ. தேர்வில் நெல்லை மாணவர் முதலிடம்!

நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ்
நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ்
Published on

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. முதலிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கான ஜே.இ.இ.- கூட்டு நுழைவுத்தேர்வில் நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த முகுந்த் பிரதீஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரியில் நடைபெற்றது. மொத்தம்11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில், 70 ஆயிரத்து 48 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் படிக்கும் முகுந்த் பிரதீசும், தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அதாவது, 300/300 மதிப்பெண்கள் பெற்ற 23 பேரில் இவரும் ஒருவர்.

வெற்றிபெற்ற மாணவர் முகுந்த், அரைக்கடத்திகள்-செமி கண்டக்டர் எனும் துறையில் பொறியாளராக விரும்புவதாகத் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இவருக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.

இவரின் தந்தை ஸ்ரீகாந்த், தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். தாயார் அஞ்சல் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com