
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் காணாமல் போனவர்களை இறந்தவர்கள் பட்டியலில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது நேபாள அரசு.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி கோசி ஆற்றங்கரையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த வெள்ளத்தில் சிக்கி காணாமல்போயினர். அவர்களைத் தேடும் பணியில் நேபாள அரசு ஈடுபட்டுவந்தது.
இந்நிலையில், இந்தப் பேரிடர் ஏற்பட்டு மூன்று மாதங்களான நிலையில், வெள்ளத்தில் காணாமல்போன 213 இந்தியர்கள், 85 சீனர்கள், 69 அமெரிக்கர்கள், மலேசியாவைச் சேர்ந்த 54 பேர், 33 ஆஸ்திரேலியர்கள் உட்பட 19 நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோரை இறந்தவர்கள் பட்டியல் அறிவிக்கும் பணியை நேபாள அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஏதேனும் தகவல் சேர்த்தல், நீக்கல் அல்லது திருத்தங்கள் இருப்பின், வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்கு முன்னதாக உறவினர்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்குமாறு இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.
இதுதொடர்பான நடைமுறைகள் முடிந்தவுடன் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.