500 புதிய எத்தனால் எரிபொருள் நிலையங்கள் !

எத்தனால் எரிபொருள் 
நிலையங்கள்
எத்தனால் எரிபொருள் நிலையங்கள்
Published on

வரும் 2026-க்குள் 500 எரிபொருள் நிலையங்களையும், 2027க்குள் 5,000 நிலையங்களையும் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் ப்ளெக்ஸ்-ப்யூயல் வாகனத்தை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்த விழாவில், இத்திட்டத்தைப் பற்றி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

”ப்ளெக்ஸ்-ப்யூயல் என்பது பெட்ரோல், எத்தனால் ஆகியவற்றை வெவ்வேறு விகிதங்களில் அல்லது 100% எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய பிரத்யேக எஞ்சின் தொழில்நுட்பங்களுடன் இருக்கும் வாகனங்கள். இதன் எஞ்சின்கள் எத்தனால் அரிப்பைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

எத்தனால் பயன்படுத்துவதால் கார்பன் புகையைக் கட்டுக்குள் வைக்க முடியும்.பெட்ரோலை விட எத்தனாலின் விலை குறைவு.

மாருதி மற்றும் ஹீரோ போன்ற நிறுவனங்கள் 100% எத்தனாலில் இயங்கும் கார்கள் மற்றும் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளன.

முதற்கட்டமாக டெல்லி, புனே, மும்பை, நாக்பூர் ஆகிய இடங்களில் 50 - 100 புதிய நிலையங்களுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.” என்று ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com