வங்கக்கடல் புயலுக்கு தமிழ்ப் பெயர் 'முரசு'!

Storm
புயல்
Published on: 

வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. தொடர்ந்து, நாளை தென்கிழக்கு – மத்திய வங்கக்கடல் பகுதியில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாகவும், அது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் வி.ஆர்.துரை கூறியுள்ளார்.

புதிதாக உருவாகவுள்ள இந்தப் புயலுக்கு இந்தியா சார்பில் தமிழில் 'முரசு' என்று பெயரிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம்,யேமன் ஆகிய 13 நாடுகள் இணைந்து புயல்களுக்கான பெயர்ப் பட்டியலை உருவாக்குகின்றன.

இந்நிலையில், நாளை உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி, தமிழகத்தை நோக்கி நகரவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com