சாட்டை துரைமுருகன் உட்பட 10 நா.த.க.வினர் இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

சாட்டை துரைமுருகன் உட்பட 10 நா.த.க.வினர் இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

சாட்டை துரைமுருகன் உட்பட நாம் தமிழர் கட்சியின் 10 நிர்வாகிகளின் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை - என்.ஐ.ஏ. இன்று காலை சோதனையில் இறங்கியுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகளிடமிருந்து வெளிநாடுகளில் இருந்து நன்கொடை திரட்டப்பட்டதாக வந்த தகவலின் பெயரில் இந்த தேடுதல் சோதனை நடத்தப்படுகிறது என்று என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாம் தமிழர் கட்சியின் பிரபல யூட்யூபரான சாட்டை துரைமுருகன், திருச்சி சண்முகா நகர் ஏழாவது குறுக்குப் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் இன்று காலை 6:00 மணிக்கு என்.ஐ.ஏ. டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையிலான ஐந்து பணியாளர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது துரைமுருகன் வீட்டில் இல்லை. அவரின் மனைவி மாதரசி மட்டுமே இருந்தார். துரைமுருகனின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. எடுத்துச் சென்றுள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர்த்து தென்காசி, சிவகங்கை, கோவை ஆகிய ஊர்களிலும் உள்ள நாம் தமிழர் கட்சியினரின் இடங்களில் என்.ஐ.ஏ. வின் சோதனை தொடர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com