1,364ஆக உயர்வு... நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை!

நீலகிரி வரையாடுகள்
நீலகிரி வரையாடுகள்
Published on

நடந்துமுடிந்த மூன்றாவது கணக்கெடுப்பில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளின் கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 24 -27 வரை தமிழகம், கேரள வனத் துறையினரால் இணைந்து நடத்தப்பட்டது.

இதில் கடந்த ஆண்டைவிட வரையாருகளின் எண்ணிக்கை 4.68% அதிகரித்துள்ளது என வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார், சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் வி.கே. ராஜீவ் ஆகியோர் தெரிவித்தனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு எடுத்த முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பின்போது பதிவான வரையாடுகளின் எண்ணிக்கை 1,031.

கடந்த ஆண்டோ இது 1,303ஆக அதிகரித்தது.

முதல் கணக்கெடுப்பைக் காட்டிலும் இப்போதைய கணக்கெடுப்பில் 32% கூடுதலாக வரையாடுகள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டு தமிழக வனத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்யேக மொபைல் செயலியான 'வருடை (Varudai)' பயன்படுத்தப்பட்டது. இது முன்னரவிட, வரையாடுகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து துல்லியமான தகவல்களைத் தந்ததாக அதிகாரிகள் கூறினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com