நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க. பட்டியலில் அதிரடி- நயினார் நெல்லைக்கு மாற்றம்!

பா.ஜ.க. தமிழக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டிருந்தார்.

அதைப் பார்த்த அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால், நயினார் நெல்லை தொகுதியில் வாக்குச்சேகரிப்புப் பணிகளில் இறங்கிவிட்டார். 

இதைத்தவிர, கூட்டணிக் கட்சியான த.மா.கா.வும் அந்தத் தொகுதியைக் கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு தரப்பிலும் பா.ஜ.க. மேலிடத்தில் முறையிட்டதையடுத்து, நயினாரை முன்னரே திட்டமிட்டபடி திருநெல்வேலி தொகுதி வேட்பாளராகவே அறிவிப்பு வெளியானது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com