உயர்நீதிமன்ற நீதிபதியை சந்தித்த நிர்மல் குமார்... தவெக வைத்த கோரிக்கை என்ன? நாளை விசாரணை!

சிடி நிர்மல் குமார்
சிடி நிர்மல் குமார்
Published on

கரூர் துயர சம்பவம் குறித்து நாளை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணை நடக்க உள்ளது.

இந்தச் சம்பவத்தில் சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தி தவெக - வின் நிர்மல் குமார் சென்னையில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, ஜோதிராமனைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பிற்கு பிறகு, நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது... "நாளை மதியம் 2.15 மணிக்கு இந்த வழக்கை மதுரை அமர்வில் விசாரணைக்கு எடுத்துகொள்வதாகக் கூறியிருக்கிறார்கள். இப்போதைக்கு நாங்கள் வேறு எதுவும் சொல்லவில்லை.

நாளை மதியம் விசாரணைக்குப் பிறகு எங்களுடைய கருத்தை நாங்கள் தெரிவிப்போம்" என்று பேசியுள்ளார்.

நேற்று கரூரில் இந்தச் சம்பவம் நடந்தததை அடுத்து, நேற்று இரவே தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பிவிட்டார். தவெக பொதுசெயலாளர் ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அடுத்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணத்திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com