“பாஜக கூட்டணி கட்சிகளுக்கு நிதிஷ்குமார் நிலைதான்...!” -

மாணிக்கம் தாகூர் எம்.பி.
மாணிக்கம் தாகூர் எம்.பி.
Published on

“நிதிஷ்குமாருக்கு வழங்கப்பட்ட அணுகுமுறையை பார்த்த பிறகு என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு செய்தி தெளிவாக சென்றிருக்க வேண்டும்.” மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.

பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விரும்பி இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் விரைவில் முறைப்படி தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அவரின் இந்த முடிவுக்கு ஜேடியு தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நிதிஷ் குமாரின் இந்த முடிவுக்கு பின்னால் பாஜக இருப்பதாக பலரும் சந்தேகிக்கின்றனர்.

இந்த சந்தேகத்த மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், ”நிதிஷ் குமார் அவர்களுக்கு வழங்கப்பட்ட அணுகுமுறையை பார்த்த பிறகு, என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு செய்தி தெளிவாக சென்றிருக்க வேண்டும்.

மோடி மற்றும் அமித் ஷா நடத்தும் இந்த கூட்டணியில், கூட்டாளிகள் உண்மையான கூட்டாளிகள் அல்ல — அவர்கள் வெறும் பயணிகள் மட்டுமே.

அதனால் தான் எடப்பாடி பழனிசாமி போன்ற தலைவர்கள் அடுத்த நிறுத்தம் என்னவாக இருக்கும் என்று சிறிது பதட்டமாக இருக்கலாம்.” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com