தமிழகத்துக்கு இப்போதைய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் இனி பெரிய அளவுக்கு மழை இருக்காது என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், மேகங்கள் நகரத்தை விட்டு வானிலை ஆய்வுப் படங்களில் வேறு திசையில் நகர்வதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
சென்னைக்கு இன்றைக்கு இலேசான மழை இருக்கும் என்றும்
நாளை காலை அல்லது மதியம்வாக்கில் மழை குறையத் தொடங்கும் என்றும்
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் தமிழகத்துக் கடலோரப் பகுதியிலிருந்து விலகிச் செல்லும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்கு பெரிய அளவுக்கு மழை இனி வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.