திருப்பரங்குன்றம் - சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்
Published on: 

மதுரை திருப்பரங்குன்றம் மலையில்   சர்ச்சைக்குரிய கல் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதுரை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது. 

ஆனால், வழக்கம்போல ஆண்டுதோறும் தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டது. 

சர்ச்சைக்குரிய தூணில்தீபத்தை ஏற்றவேண்டும் என வலியுறுத்தியும் அதைச் செயல்படுத்தவில்லை என அரசை எதிர்த்து இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கும்பலாக திருப்பரங்குன்றத்தில் கூடி பிரச்னையில் ஈடுபட்டனர். 

முதலில் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர், பின்னர் அவர்களைக் கைதுசெய்து அப்புறப்படுத்தினர்.