இராமதாசுக்கு மாம்பழம் சின்னம் இல்லை!

இராமதாசுக்கு மாம்பழம் சின்னம் இல்லை!
Published on

பா.ம.க. நிறுவனர் இராமதாசுக்கு இந்தத் தேர்தலில் மாம்பழம் சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. 

பா.ம.க. தலைமை என்பது அன்புமணி தரப்புக்குதான் என்பது உச்சநீதிமன்றம்வரை போய் உறுதியாகிவிட்டது. தேர்தல் ஆணையத் தரப்பிலும் இதை உறுதிசெய்துவிட்டார்கள்.

ஆனாலும் பா.ம.க. தலைமையும் கட்சி சின்னமும் தங்களுக்குதான் சொந்தம் என கட்சியின் நிறுவனர் இராமதாசு தரப்பு கூறிவருகிறது.

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. அதற்குத் தடைவிதிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அதில், வரும் மே 10ஆம் தேதிவரை உரிமையியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்குத் தடை நீடிக்கும் என்று நீதிமன்றம் கூறிவிட்டது.

எனவே, இந்தத் தேர்தலில் இராமதாசு தரப்பு மாம்பழம் சின்னத்தில் போட்டியிட முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com