அண்ணாமலை
அண்ணாமலை

இனி செய்தியாளர் சந்திப்பு இப்படித்தான் - அண்ணாமலை திடீர் மாற்றம்!

இனிமேல் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம், மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்துகொண்ட அவர், விமானம் மூலம் இன்று கோவைக்குத் திரும்பினார்.

கோவை விமான நிலையத்தில் அவரிடம் ஊடகத்தினர் கேள்வி கேட்க முயன்றனர். அப்போது அவர், “இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களைச் சந்திக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் முறைப்படுத்தப் போகிறோம். செய்தியாளர் சந்திப்பு என்பது பா.ஜ.க. அலுவலகத்தில் மட்டுமே. நான் கோவையில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன் என்றால் அது கட்சி அலுவலகத்தில் மட்டும்தான். செய்தியாளர் சந்திப்பு குறித்து, முறைப்படி 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே தகவல் அளிக்கப்படும்.” என்று கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com