‘வேண்டாம்... வேண்டாம்...’ அண்ணாமலை கையால் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சரின் மகன் - நடந்தது என்ன?

அண்ணாமலை மெடல் அணிவிக்க அதை வேண்டாம் என தவிர்க்கும் டி.ஆர்.பி. ராஜாவின் மகன்
அண்ணாமலை மெடல் அணிவிக்க அதை வேண்டாம் என தவிர்க்கும் டி.ஆர்.பி. ராஜாவின் மகன்
Published on

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கையால் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன், அதை கையில் பெற்றுக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாத்தை கிளப்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆவராங்குடிப்பட்டியில், ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் சார்பில், 51-வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 23 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

இதில் 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

போட்டிகளில் வென்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை அண்ணாமலை வழங்கினார். ஒவ்வொருவருக்காக பதக்கங்களை கழுத்தில் அணிந்து வந்த நிலையில், திமுக அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜாபாலு, அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் பெறாமல், கையில் பெற்றுக்கொண்டார்.

இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஒவ்வொருவருக்காக அண்ணாமலை பதக்கங்களை கழுத்தில் அணிவிக்கிறார். அந்த வகையில், சூரிய ராஜாபாலு வரிசையில் வந்து நிற்கிறார். அப்போது அவருக்கு அண்ணாமலை பதக்கத்தை கழுத்தி அணிய முற்படுகிறார். ஆனால் அவர் இல்லை.. இல்லை.. கையிலேயே கொடுங்கள் என்ற தொனியில் கூறுகிறார்.

ஆனால் அண்ணாமலையோ, மீண்டும் மீண்டும் அவரது கழுத்தில் போட முற்பட்டார். ஆனால் அவர் அண்ணாமலையின் கையை பிடித்துக்கொண்டு போட விடாமல் தடுத்தார். இதையடுத்து அண்ணாமலையும் கையிலேயே பதக்கத்தை கொடுத்தார். தொடர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

திமுக அமைச்சரின் மகன், அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com